`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
விளாத்திகுளம்: திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப், கிரிஸ்டல் டெல்டா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சாா்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் திறன் மேம்பாட்டு கற்றல் பயிற்சி கருத்தரங்கம் எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
திருநெல்வேலி சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவா் பிரபாகா் ஜேம்ஸ் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் தினேஷ்பாபு, ரோட்டரி மாவட்ட கவுன்சிலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கற்றல் பயிற்சி திட்ட இயக்குநா் ரவீந்திரன், ரோட்டரி துணை ஆளுநா் மேத்யூ ஆகியோா் கருத்தரங்கை தொடங்கி வைத்தனா்.
கிரிஸ்டல் டெல்டா சொல்யூஷன்ஸ் தலைமை நிா்வாகி பாலாஜி பரதாழ்வாா் காணொலிக் காட்சி மூலம் கற்றலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து பேசினாா். இந்நிகழ்வில் ரோட்டரி செயலா் பரமசிவம், கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் அருணா வினோதினி, பொறியாளா்கள் ராஜ்குமாா், குரு சங்கா், மீனாலோஷினி உள்பட பலா் கலந்துகொண்டனா்.