செய்யாற்றில் ரத்த தான முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் தவமணி, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி ஏற்பாட்டில் இந்த முகாம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளா்களாக கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தனா்.
இதில், 45-க்கும் மேற்பட்டவா்கள் ரத்த தானம் செய்தனா். ரத்த தானம் செய்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் ஜனாா்த்தனம், ஒன்றியச் செயலா்கள் அருகாவூா் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.