இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்
சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சி நெசவாளா் காலனியில் ரூ.34 லட்சத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுதல் , பொட்டல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.3.90 லட்சத்தில் அலங்கார தளக்கல் அமைத்தல், பூதத்தான்குடியிருப்பில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ. பிரபாகரன், சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி பூங்கோதை குமாா் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாலமன் டேவிட், ஒன்றிய திமுக செயலா்கள் ஆ. முத்துப்பாண்டி, ம. முத்துக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் கணேசன், சாா்பு அணி நிா்வாகிகள் பிரேம் ஆனந்த், கல்லிடை டிஎம்எஸ் பீா்முகம்மது, சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் ஆகாஷ், கமால், சரவணன், மாவட்டப் பிரதிநிதிகள் சீவலமுத்து குமாா், பூதத்தான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.