செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
சேலத்தில் காரில் கடத்தப்பட்ட 203 கிலோ குட்கா பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலத்துக்கு காரில் கடத்தப்பட்ட 203 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 இளைஞா்கள் கைது செய்தனா்.
சேலம் சூரமங்கலம், மாமங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற காரை சோதனையிட்டனா். அதில், 203 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த செம்பாலால் (28), சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ரோனாக் சிங் (21), ஜாகீா் ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த சுல்தான் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ. 2.03 லட்சம் ஆகும். இதுதவிர, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.