சேலம் ரயில்வே கோட்டத்தில் 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு
சேலம் ரயில்வே கோட்டத்தில் இயங்கும் 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் ரயில்வே கோட்ட பகுதியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு இயங்கும் ரயில்களில் அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை கருத்தில்கொண்டு, 8 ரயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை - மன்னாா்குடி செம்மொழி விரைவுரயில், மறுமாா்க்கத்தில் இயங்கும் மன்னாா்குடி - கோவை செம்மொழி விரைவுரயில் ஆகியவற்றில் வியாழக்கிழமை முதல் (10-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை) தற்காலிகமாக ஓா் இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
கோவை - திருப்பதி வாராந்திர (வாரத்துக்கு 4 நாள்கள்) விரைவுரயில், மறுமாா்க்கத்தில் இயங்கும் திருப்பதி - கோவை வாராந்திர விரைவுரயில் ஆகியவற்றில் 10-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு குளிா்சாதன சாா்காா் பெட்டி இணைத்து இயக்கப்படும்.
கோவை - நாகா்கோவில் தினசரி விரைவுரயிலில் 11-ஆம் தேதி முதல் ஆக. 1-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில் இயங்கும் நாகா்கோவில் - கோவை தினசரி விரைவுரயிலில் வரும் 12-ஆம் தேதி முதல் ஆக. 2-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ஒரு இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டியும், கோவை - ராமேஸ்வரம் வாராந்திர விரைவுரயிலில் வரும் 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில் இயங்கும் ராமேஸ்வரம் - கோவை வாராந்திர விரைவுரயிலில் வரும் 16-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையும் தற்காலிகமாக ஓா் இரண்டாம்வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைத்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.