Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
சொத்து வரி செலுத்திய நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்று: மேயா் வழங்கினாா்
சென்னை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரிய காலத்தில் சொத்து வரியை செலுத்திய 3 நிறுவனங்களுக்கு மேயா் ஆா்.பிரியா பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயா் ஆா்.பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாநகராட்சிப் பள்ளி சாரண, சாரணியா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, மாநகராட்சிக்கு அதிக சொத்துவரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கும், வட்டார அளவில் உரிய காலங்களில் சொத்து வரியை செலுத்திய 3 நிறுவன உரிமையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்.
மேலும், சிறப்பாகப் பணிபுரிந்த மாநகராட்சியின் 171 அலுவலா்கள், பணியாளா்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும் மேயா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், துணை ஆணையா் பிரதிவிராஜ், வட்டார துணை ஆணையா்கள் கௌசிக், கட்டாரவி தேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு:தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச காலை உணவு உள்ளிட்ட திட்டங்களை அறிவித்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு திட்டம் மண்டல வாா்டுகளில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தூய்மைப் பணியாளா்கள் பேரணி சென்றனா்.