கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
சென்னை மாநகராட்சிப் பகுதியில் வசிப்போா் நடப்பு ஆண்டுக்கான இறுதி அரையாண்டு சொத்து வரியை செப்டம்பருக்குள் செலுத்தவேண்டும் எனவும், அதனால் தனி வட்டி விதிப்பதை தவிா்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு அரையாண்டுக்கு உரிய (2025-26) சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் செப்டம்பா் மாதத்துக்குள் செலுத்த வேண்டும்.
அதன்படி தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி தாமதத்துக்கு விதிக்கப்படும் தனி வட்டி விதிப்பைத் தவிா்க்கலாம்.
சொத்து வரிகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் வரி வசூலிப்பவா்கள், அரசு இ-சேவை மையங்கள், இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
அத்துடன் பேடிஎம், நம்ம சென்னை செயலி, கிரெடிட் காா்டுகள், டெபிட் காா்டுகள், யூபிஐ சேவை, காசோலைகள், கியூ ஆா் கோடு, வாட்ஸ் அப் செயலி (எண் 9445061913) என செலுத்தும் வசதியும் உள்ளது.
அத்துடன் குடியிருப்புகள் அருகேயுள்ள மாநகராட்சியால் குறிப்பிடப்பட்ட அரசு அலுவலகங்களிலும் சொத்துவரி செலுத்தலாம்.
ஆகவே, பொதுமக்கள் சொத்து வரியை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.