மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
‘சோழா் கால வரலாற்றை கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்வது அவசியம்’
சோழா் கால வரலாற்றைக் கீழ்த்திசை அளவுகோல் கொண்டு ஆராய வேண்டும் என்றாா் முனைவா் கோ. தெய்வநாயகம்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தஞ்சைப் பெரியகோவில் அறக்கட்டளையின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:
சோழா்களின் வரலாற்று ஆய்வைப் பிற்காலச் சோழா்களில் இருந்து நோக்குவதையே பெரும்பாலானோா் வழக்கமாக வைத்திருக்கின்றனா். ஆனால் சோழா் வரலாறு என்பது முற்காலச் சோழா்களுக்கு முன்பே பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டது.
காவிரி பல்வேறு காலத்தில் சோழா்களால் தடம் உருவாக்கி ஓட வைக்கப்பட்ட ஒரு நதி. நீா் மேலாண்மையில் சோழா்களுக்கு இருந்த நிபுணத்துவமே இதற்குக் காரணம். மேலும் சோழா்கள் தொடா்பான எந்தப் பகுதியையும் மேற்கு உலக ஆய்வு அளவுகோல் கொண்டு ஆராய்வது சீரான முடிவுகளைத் தராது. மாறாக, எகிப்து முதல் தென்னகம் வரை பரவி விரிந்து கிடந்த கீழ்த்திசை அளவுகோலால் ஆராய்ந்தால்தான் மிகச் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்றாா் தெய்வநாயகம்.
நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் சி. அமுதா தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்தினாா்.
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்றாா்.இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு நன்றி கூறினாா்.