ஜம்மு- காஷ்மீரில் தாக்குதல்: நெல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, திருநெல்வேலியில் போலீஸாா் கண்காணிப்பை பலப்படுத்தினா்.
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலா் உயிரிழந்தனா். இதன் எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் மத்திய துணை ராணுவத்தினா் மற்றும் மாநில போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
அதன்படி, திருநெல்வேலி மாநகர போலீஸாா் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். வாகனச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.