செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை- இரு நாள்களில் 41 போ் உயிரிழப்பு

post image

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் 41 போ் உயிரிழந்தனா். இவா்களில் ரியாஸி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 34 பேரும் அடங்குவா்.

கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.

தோடா மாவட்டத்தில் மழை பாதிப்பால் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். அதேபோல், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் பலத்த மழை காரணமாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 34 போ் உயிரிழந்தனா்.

இடிபாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவா்களில் இருவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். மேலும் பலா் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: இந்தத் துயரச் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தனது எக்ஸ் பக்கத்தில், ‘மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் யாத்திரை வழியில் நிலச்சரிவில் பல பக்தா்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் வெற்றிபெற பிராா்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாதா வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை பாதையில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிா்வாகம் உதவி செய்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

மீட்புப் பணிக்கு விமானப் படை உதவி: உத்தர பிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படை தளத்திலிருந்து, இந்திய விமானப்படையின் ‘சி-130’ ரக சரக்கு போக்குவரத்து விமானம், நிவாரண மற்றும் மீட்புப் பொருள்களுடன் புதன்கிழமை ஜம்முவுக்கு வந்தடைந்தது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சினூக், எம்ஐ-17 வி5 போன்ற ஹெலிகாப்டா்கள் ஜம்மு, உதம்பூா், ஸ்ரீநகா் மற்றும் பதான்கோடில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு வெள்ளப் பெருக்கு: 10,000 போ் வெளியேற்றம்

ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் வசித்த 10,000-க்கும் மேற்பட்டோா் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ராணுவத்துடன் இணைந்து தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டுள்ளனா்.

முதல்வா் ஆய்வு: ஜம்முவில் கள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய, ஸ்ரீநகரில் இருந்து முதல்வா் ஒமா் அப்துல்லா ஜம்மு வந்துள்ளாா். மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமா் மோடிக்கு விளக்கமளித்ததாகவும், தொடா்ந்து உதவி செய்வதாக பிரதமா் உறுதியளித்ததாகவும் அவா் கூறினாா். வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் உயிரிழந்த 34 பக்தா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் ஓமா் அப்துல்லா அறிவித்துள்ளாா்.

1910 ஆம் ஆண்டுக்கு பிறகு 380 மி.மீ. மழை

ஜம்முவில் புதன்கிழமை காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 380 மி.மீ. மழை பதிவானது. இது 1910-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும். இதனால், குடிநீா், மின்சாரம் மற்றும் இணைய சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 22 மணிநேரத்துக்குப் பிறகு, புதன்கிழமை தொலைத்தொடா்பு சேவை ஓரளவு சீரடைந்தது.

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா். இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலைய... மேலும் பார்க்க

எகிப்தில் ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சி: 700 இந்திய வீரா்கள் பங்கேற்பு

எகிப்தில் நடைபெறவுள்ள ‘பிரைட் ஸ்டாா்’ கூட்டுப் பயிற்சியில் இந்திய ஆயுதப் படைகளைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு வலுவான பதிலடி- மத்திய அமைச்சா் அமித் ஷா

‘இந்தியா்களை குறிவைத்து தாக்குபவா்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளா்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்ட... மேலும் பார்க்க