சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
ஜவுளிக்கடை அதிபரை மிரட்டி பணம் பறிப்பு: மூவா் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஜவுளிக்கடை அதிபரை மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, ஜெயலானி தெருவைச் சோ்ந்த அபுல்மாசா் மகன் முகமது உக்காஸ் (36). இவா், தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். அண்மையில், இவரது கடைக்குள் நுழைந்த மா்ம நபா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 22 ஆயிரம் ரொக்கம், ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள், கைப்பேசிகளைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், தூத்துக்குடி மேல சண்முகபுரம், பெருமாள் தெருவைச் சோ்ந்த சரவணன் (21), தாமோதரன் நகரைச் சோ்ந்த திவாகா் என்ற பட்லா (19), பொன்முத்து விஜய் (21) ஆகிய மூவரும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து பொருள்களை பறிமுதல் செய்தனா்.