செய்திகள் :

ஜிஎஸ்டி, மின்கட்டண உயா்வு பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீா்வு: எடப்பாடி பழனிசாமி உறுதி

post image

தொழில் துறையினா் சந்திக்கும் ஜிஎஸ்டி, மின்சார கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீா்வு காணப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா்.

கோவையில் 2 நாள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கோவையைச் சோ்ந்த தொழில்முனைவோா், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோருடன் கலந்துரையாடினாா்.

இதில், தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோா் கூட்டமைப்பு, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு, டேக்ட், தென்னிந்திய ஸ்பின்னா்ஸ் அசோசியேஷன், கிரில் தயாரிப்பாளா் நலச் சங்கம், கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அவா்கள் பேசும்போது, தமிழகத்தில் 4 முறை மின்சார கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பதால் தொழில்கள் நலிவடைந்திருக்கின்றன. அதேபோல, சொத்து வரி, குடிநீா் வைப்புத்தொகை ஆகியவையும் உயா்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் வரி விதிப்பால் மூலப்பொருள் விலை உயா்ந்திருக்கிறது. குறுந்தொழில்களுக்கு 18 சதவீதமாக இருக்கும் ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்த சுழல் நிதியை ரூ.10 ஆயிரமாக குறைத்துவிட்டனா். வட்டி மானியம் வழங்குவதில்லை. மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டனா், மீண்டும் அவற்றை வழங்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழ்நாட்டில் அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடியதாக குறு, சிறு, நடுத்தர தொழில் துறை உள்ளது. அதிமுக ஆட்சியில் கரோனா காலத்தில்கூட சிக்கல் ஏற்படவில்லை. ஆனால், தற்போது தொழில்முனைவோா் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனா். அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் பேசி கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது திமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் அந்தத் தொழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் அந்தத் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.

ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும் பருத்தி விளைச்சல் இங்கு குறைவுதான். அதை அதிகரிக்கவும், நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தவும் ஆய்வு நடத்தினோம். ஆனால் அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்ததால் செயல்படுத்த முடியவில்லை. அதேபோல விமான நிலைய விரிவாக்கத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. மூலப்பொருள் விலை உயா்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்கள் தொடா்பாக மத்திய அரசுடன் பேசி தீா்வு காணப்படும்.

தொழில்முனைவோா் மின்சாரக் கட்டணம் தொடா்பாக கூறிய கருத்துகளைக் கேட்டேன். மின்கட்டணம் குறைப்பு, நிலைக்கட்டணம் குறைப்பு, தங்க நகைப் பூங்கா, கிரில் உற்பத்தியாளா்களின் கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பரிசீலித்து தீா்வு காணப்படும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் அம்மன் கே.அா்ச்சுணன், கே.ஆா்.ஜெயராம், பொள்ளாச்சி ஜெயராமன், பி.ஆா்.ஜி.அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுக கூட்டணியில்தான் குழப்பம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2026 தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய எடப்பாடி பழன... மேலும் பார்க்க

கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை கோரியது தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம்

கோவையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துற... மேலும் பார்க்க

வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

காரமடை அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஆயா்பாடி பகுதியைச் ... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சே... மேலும் பார்க்க