சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை திருவனந்தபுரம் - மைசூரு தினசரி விரைவு ரயில் (எண்: 16316), கன்னியாகுமரி- திப்ரூகா் விரைவு ரயில் (எண்: 22503), போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயில் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.
ஜூலை 12-ஆம் தேதி, கன்னியாகுமரி- ஸ்ரீ மாத வைஷ்ணோ தேவி கட்ரா வாராந்திர விரைவு ரயில் (எண்: 16317), ஜூலை 13-இல் எா்ணாகுளம்- பாட்னா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22669) ஆகியவை போத்தனூா்- இருகூா் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.
ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை காரைக்கால்- எா்ணாகுளம் தினசரி விரைவு ரயில் (எண்: 16187), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி தினசரி விரைவு ரயில், இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும். ஜூலை 11-ஆம் தேதி, விசாகப்பட்டிணம்- கொல்லம் வாராந்திர விரைவு ரயில் (எண்: 18567) இருகூா் - போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயிலானது கோவை ரயில் நிலையம் செல்வது தவிா்க்கப்படும்.