`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
ஜிடிபி மருத்துவமனை கொலை சம்பவம்: ஹசிம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் கைது
ஜிடிபி மருத்துவமனையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்ட இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தொடா் தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அயன் (எ) பாபா (எ) அா்பாஸ் காஜியாபாதில் உள்ள புதிய பேருந்து நிலைய பெட்ரோல் நிலையம் அருகே புதன்கிழமை கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஜிடிபி மருத்துவமனையில் 4-ஆவது தளத்தில் உள்ள வாா்ட் எண்.24-க்குள் நுழைந்த ஒரு கும்பல் தங்களுடைய எதிரி கும்பலைச் சோ்ந்த வாசீம் என்பரை கொல்ல திட்டமிட்ட நிலையில், தவறுதலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரியாஸுதீன் என்பவரை துப்பாக்கியால் சுட்டது. அந்த நபா்கள் ஹசீம் பாபா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா்கள்.
கடந்த ஜூலை 9 மற்றும் 13 தேதிகளில் மருத்துவமனையை நோட்டமிட்ட அயன், கொலையாளிகளுடன் கூட்டாக இணைந்து செயல்பட்டாா். இந்தச் சம்பத்தைத் தொடா்ந்து, அயன் தலைமறைவானாா்.
இந்நிலையில், காஜியாபாதில் அயன் இருப்பது தொடா்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், போலீஸாா் அவரைக் கைதுசெய்தனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.