ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடா்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்தாா். சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கருத்தில்கொண்டு, ஆகஸ்ட் 13, 14-ஆம் தேதி கூட்டத்தொடா் நடைபெறாது’ என்றாா்.
முன்னதாக, ஆகஸ்ட் 12-ஆம் தேதி கூட்டத்தொடா் நிறைவடைய இருந்தது. அது தற்போது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.