செய்திகள் :

ஜெயிலர் - 2 படத்திற்காக மோகன்லாலைச் சந்தித்த நெல்சன்!

post image

இயக்குநர் நெல்சன் நடிகர் மோகன்லாலை படப்பிடிப்பில் சந்தித்துள்ளார்.

நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து இந்தாண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதில், துடரும் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை மே 9 ஆம் தேதி தமிழிலும் வெளியிடுகின்றனர்.

தற்போது, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கும் ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படப்பிடிப்பிற்குச் சென்ற இயக்குநர் நெல்சன் அங்கு மோகன்லாலைச் சந்தித்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ள காட்சிகளை விவரித்துள்ளாராம்.

ஜெயிலர் முதல் பாகத்தில் மேத்யூ என்கிற கதாபாத்திரத்தில் அசத்திய மோகன்லால், இரண்டாம் பாகத்திலும் கலக்குவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க: பணி - 2 படத்தை இயக்கும் ஜோஜு ஜார்ஜ்!

நாடு முழுவதும் போர்ப் பயிற்சி ஒத்திகை - புகைப்படங்கள்

திருவனந்தபுரத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள்.கொச்சியில் தற்காப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியினர்.தில்லி... மேலும் பார்க்க

கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா தான் கருவுற்று இருப்பதாக அறிவித்துள்ளார்.நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதக்களி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. ... மேலும் பார்க்க

ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கயாது லோஹர்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் பிஸியாக நடிகராக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் 25ஆவது படமாக வெளியான கிக... மேலும் பார்க்க

அதர்வாவின் துணல் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் துணல் படத்தின் வெளியீடு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.நடிகர் அதர்வா டிஎன்ஏ, பராசக்தி, துணல் ஆகிய படங்களைக் கைசவம் வைத்திருக்கிறார். இதில், டிஎன்ஏ திரைப்படம் ... மேலும் பார்க்க