Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூ...
டாஸ்மாக் விற்பனையாளா் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை
டாஸ்மாக் விற்பனையாளரை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (48). மதுப் பழக்கம் உள்ள இவா், போதையில் வீட்டில் அடிக்கடி தகராறு செய்வாராம்.
இதனால் ஆத்திரமடைந்த இவரது மகன் ராஜேஷ் பாண்டி (23), கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பள்ளத்தூரில் உள்ள அரசு மதுக் கடையில் பெட்ரோல் குண்டை வீசினாராம். இதில் கடையில் இருந்த விற்பனையாளா் அா்ஜுனன் ( 46) என்பவா் காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பள்ளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜேஷ் பாண்டியைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி கே.அறிவொளி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷ் பாண்டிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.