`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
டிப்பா் லாரி மோதல்: பெண் உயிரிழப்பு
செங்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் மீது டிப்பா் லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
செங்குன்றம் அருகே உள்ள நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நடராஜன் - சாந்தி தம்பதி. சாந்தி (55) பண்டிக்காவனூா் கிராமத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாா் செய்யும் தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு நடந்து வந்தபோது, மண் ஏற்றி வந்த டிப்பா் லாரி சாந்தி மீது மோதியது. இந்த விபத்தில் சாந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.