``பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை” -மோடி, நிர்மலா சீதாராமனை சாடிய காங்கிரஸ...
டீப்சீக் செயலிக்குத் தடை விதித்த தென் கொரியா!
பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
சீனாவின் செயற்கை நுண்ணறிவு செயலியான டீப்சீக் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான விதிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அந்தச் செயலியைப் புதிதாகப் பதிவிறக்குவதை தென் கொரிய அரசின் தரவு பாதுகாப்பு ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனை, தென் கொரிய அரசின் தரவுகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் சோய் ஜாங்-ஹியூக் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தென் கொரியாவின் சட்ட திட்டங்களுக்கேற்ப டீப்சீக் செயலியின் தனிப்பட்ட தரவுகள் செயல்பாட்டு நடைமுறைகள் முழுமையாக ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | இந்தியாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி: அமெரிக்கா ரத்து
டீப்சீக் செயலியில் உள்நாட்டு தனியுரிமைச் சட்டங்களுக்கான பரிசீலனைகள் குறைவு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தென் கொரியாவின் தனியுரிமைச் சட்டங்களுடன் அந்தச் செயலியை இணைப்பதற்கு அதிக காலம் செலவாகும் என்றும் தென் கொரிய தரவுகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக டீப்சீக் செயலியை அரசு அலுவலகங்களில் பயன்படுத்த தென் கொரிய அரசு தடை விதித்துள்ளது.
மேலும், டீப்சீக் செயலியின் பயன்பாட்டினைத் தவிர்க்க அதன் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, அந்தச் செயலியை ஏற்கனவே பயன்படுத்தும் பயனர்கள் இந்தத் தற்காலிகத் தடை தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனிப்பட்ட தகவல்களை டீப்சீக் செயலியில் உள்ளிடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
தென் கொரிய செயலிகள் தரவிறக்கும் தளங்களில் இருந்து டீப்சீக் செயலி கடந்த பிப். 15 மாலை 6 மணி முதல் அகற்றப்பட்டதாகவும், இன்று முதல் ஆப்பிள் ஆப் ஸ்டோரின் தென் கொரிய பதிப்பில் அந்தச் செயலி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் முன்பே செயலியைப் பதிவிறக்கம் செய்த பயனர்கள் அதனைப் பயன்படுத்த முடியும்.