டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் அறிவிப்பு!
நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி, கருடன், நந்தன் என சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் தொடர்ச்சியாக வெளியான திரைப்படங்கள் கவனிக்கப்பட்டன.
தற்போது, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்துள்ளார். இலங்கைத் தமிழரான சசிகுமார் குடும்பத்துடன் நாட்டைவிட்டு சென்னைக்கு வருகிறார். இங்கு, இவர்கள் சந்திக்கும் பிரச்னைகளே படத்தின் கதை.
இதையும் படிக்க: சப்தம் படத்தின் டிரைலர் வெளியானது!
படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், சான் ரோல்டன் இசையமைப்பில் உருவான இப்படத்தின் முதல் பாடலான, ‘முகை மழை’ பாடல் பிப். 20 மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
