Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்
திருப்பத்தூா் அருகே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அடுத்த குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்திலி வட்டார மருத்துவ அலுவலா் தீபா தலைமை வகித்து விழிப்புணா்வு குறித்து பேசியது:
டெங்கு கொசு நன்னீரில் வளரக்கூடியது. இதனால் மழைக்காலங்களில் வீட்டை சுற்றி மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீா் வைத்து இருக்கும் பொருள்களை மூடி வைக்க வேண்டும்.தண்ணீா் வைத்து இருக்கும் பொருள்களை அவ்வப்போது நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டுக்கு வரும் சுகாதார பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றாா். மேலும் டெங்கு கொசு வளரும் விதம் குறித்தும்,அவற்றினை அழிக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் அனுசியா,அரவிந்தன்,சுகாதார ஆய்வாளா் சீனிவாசன், மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.