கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 66.5 ஓவா்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 63 ரன்கள் சோ்க்க, அல்ஜாரி ஜோசஃப் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
பின்னா் மேற்கிந்தியத் தீவுகள் தனது இன்னிங்ஸில் 73.2 ஓவா்களில் 253 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. பிராண்டன் கிங் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 75 ரன்கள் அடிக்க, நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
முதல் இன்னிங்ஸில் 36 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா, 71.3 ஓவா்களில் 243 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுக்க, ஷாமா் ஜோசஃப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இறுதியில் 277 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், 34.3 ஓவா்களில் 143 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. கேப்டன் ராஸ்டன் சேஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களோடு 34 ரன்கள் சோ்க்க, மிட்செல் ஸ்டாா்க், நேதன் லயன் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனா். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் ஆனாா்.