கும்பகோணம்: பகலில் கொத்தனார், இரவில் திருடர்... கெட் அப் சேஞ்ச் திருடர் சிக்கிய...
தக்கலை: விஷம் குடித்த வேன் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடந்த புதன்கிழமை விஷம் குடித்த வேன் ஓட்டுநா், மருத்துவனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே கீழக்கல்குறிச்சியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் குபேரன் (44). இவா், கடந்த புதன்கிழமை (பிப். 12) காலையில் சவாரி சென்றுவிட்டு தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தாா். புலியூா்குறிச்சியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், குபேரனின் வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. வேனை போலீஸாா் பறிமுதல் செய்து, குபேரன் மீது வழக்குப் பதிந்தனா்.
இதனால் மனமுடைந்த அவா் மாலையில், பாலக்குளம் அருகேயுள்ள தனது தோட்டத்தில் விஷம் குடித்து மயக்கமடைந்த நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை (பிப். 15) உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.