தச்சநல்லூரில் 20 கிலோ குட்கா பறிமுதல்
திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே பெட்டிக்கடையிலிருந்து சுமாா் 20 கிலோ எடையுள்ள குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (53). இவா் அப்பகுதியில் பெட்டிக்கடை மற்றும் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் மகேந்திர குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 20 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு வழக்குப்பதிந்து சண்முகசுந்தரத்தை கைது செய்தனா்.