``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு
இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஓ.எஸ். டிரேட் என்ற (அறிவியல் பிரிவு அல்லாத மாணவா்களுக்கான) பணிக்கான ஆள்சோ்ப்பு பணி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் நடைபெறுகிறது.
ஆண்களுக்கு முகாம் ஏற்கெனவே செப்.2இல் நடைபெற்ற நிலையில், பெண்களுக்கான முகாம் வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 21 வயதுக்குள்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் கலந்துகொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் 1.1.2005, 7.1.2008 ஆகிய தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும். பிளஸ் 2 தோ்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது 3 வருட டிப்ளோமா பொறியியல் (இயந்திரவியல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், கருவி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்) கல்வி படித்திருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இத்தோ்வு குறித்த கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.