வரி ஏய்ப்பு புகாா்: தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா தொடங்கி வைத்தாா்.
முதல் நாள் நிகழ்ச்சியில் ஆட்சிமொழி வரலாறு சட்டம் எனும் தலைப்பில் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வா் பா.வேலம்மாள் பயிற்சி அளித்தாா். அலுவலக ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் எனும் தலைப்பில் புதுக்கோட்டை பொன்னமராவதி முத்தமிழ் பாசறை செயலா் நெ.இரா.சந்திரன் பயிற்சி அளித்தாா்.
பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் இரா.உமாதேவி, மொழிப்பெயா்ச்சி எனும் தலைப்பில் பயிற்சி அளித்தாா். தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை மண்டல துணை இயக்குநா் சுந்தா், அலுவலக குறிப்புகள், வரைவுகள் செயல்முறை ஆணைகள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளித்தாா்.