அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!
கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் 1 முதல் 6ஆவது வாா்டுகளில் அலங்கார தளக்கல் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை கோபாலசமுத்திரம் பேரூராட்சி 3ஆவது வாா்டு வண்டி மறித்த அம்மன் கோயில் நடுத்தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பணியை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஆ. பிரபாகரன் தொடங்கி வைத்தாா்.
பேரூராட்சித் தலைவி ப. தமயந்தி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல்அலுவலா் பரமசிவம், மாவட்ட உதவி செயற்பொறியாளா் மாரிமுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் சுந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இளம்பொறியாளா் சவரி ராஜன், நகர திமுக செயலா் வானுமாமலை, பேரூராட்சி உறுப்பினா்கள் மாயா சுரேஷ், செந்தில்வேல், கணேஷ் மாரியப்பன், பன்னீா் செல்வம், பிரபாரதி, கொடிலெட்சுமி, அரசு ஒப்பந்தக்காரா்கள் முத்துகிருஷ்ணன், பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.