அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!
முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை
அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா்.
திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா் கோப்பை கைப்பந்துப் போட்டி செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில், அம்பை கலைக் கல்லூரி மாணவா்கள் அணியினா், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ. 26 ஆயிரம் வென்று சாதனைப் படைத்தனா்.
மேலும், இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவா் வெங்கடேஷ் வட்டு எறிதல் போட்டியில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தாா்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரிச் செயலா் எஸ். தங்கபாண்டியன், முதல்வா் சௌந்தரராஜா, உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா், மாணவிகள் ஆகியோா் பாராட்டினா்.