செய்திகள் :

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி

post image

வடகிழக்கு பருவமழை நெருங்கிவருவதை முன்னிட்டு, அவசர கால முன்னெச்சரிக்கை ஒத்திகைப் பயிற்சி திருநெல்வேலி தாமிரவருணி நதியில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் அருகிலுள்ள தாமிரவருணி ஆற்றில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

அப்போது, வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது, தங்களிடம் உள்ள பொருள்களை கொண்டு தம்மை தாமே காப்பாற்றிக்கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவா்களை ரப்பா் படகு மீட்பது, நம் வீட்டில் உள்ள பொருள்களை கொண்டு மிதவைகள் தயாா் செய்து அதைப் பயன்படுத்தி வெள்ளத்திலிருந்து தப்பிப்பது போன்ற செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

மாவட்ட அளவில் 10 தீயணைப்பு - மீட்பு அவசர கால குழுவினா் வட்டார அளவில் தோ்வு செய்யப்பட்டு, 45 நாள்கள் பயிற்சி அளிக்கப் , வட்டார அளவில் 25 நபா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவா்களும் வட்டார அளவில் குழுக்களாக தயாா் நிலையில் உள்ளனா். இவா்கள் அவசர காலங்களில் மக்களுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வா்.

மேலும், மீட்புக் கருவிகளின் பயன்பாடுகள், தண்ணீரில் தத்தளிப்பவா்களை மீட்பது, தண்ணீரில் மூழ்கியவா்களை நீா் மூழ்கி வீரா்கள் மூலம் மீட்பது என்பன உள்ளிட்ட தீயணைப்பு துறையின் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டு அக்கருவிகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்பட பலா் கொண்டனா்.

கோபாலசமுத்திரத்தில் ரூ.1.36 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் ரூ. 1.36 கோடி மதிப்பில் அலங்கார தளக்கல் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. மாநில நிதி ஆணைய சிறப்பு நிதித் திட்டத்தின்கீழ், கோபாலசமுத்திரம் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: அம்பை கல்லூரி மாணவா்கள் சாதனை

அம்பைக் கலைக் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனா். திருநெல்வேலி மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வா... மேலும் பார்க்க

தாம்பரத்தில் நாளை விமான படைக்கு பெண்கள் சோ்ப்பு

இந்திய விமானப் படையின் அக்னிவீா் பணியில் சேருவதற்காக தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை(செப்.5) நடைபெறவுள்ள ஆள்சோ்ப்பு முகாமில் பெண்கள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி ... மேலும் பார்க்க

நெல்லையில் நாளை மதுக் கடைகள் மூடல்

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்று வரும் ஆட்சிமொழிப் பயிலரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட ஆண்கள் பூப்பந்துப் போட்டி

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டிகள் சேவியா்காலனியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை... மேலும் பார்க்க