தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
தச்சநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தச்சநல்லூா், மேலக்கரையைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் மகாராஜன் (26). இவரை, பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வழக்கில் தச்சநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில், மகாராஜன் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.