தஞ்சாவூரில் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கல்லூரிக் கல்விப் பணியில் பணியாற்றும் அரசு கல்லூரியின் மூத்த ஆசிரியரை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள ஆசிரியா் பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும். 2025 - 26 ஆம் ஆண்டுக்கான ஆசிரியா் பொது இடமாறுதல் கலந்தாய்வை நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கழகத்தின் தஞ்சாவூா் மண்டலத் தலைவா் சீ. தங்கராசு தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் வி. பாரி, பொருளாளா் பி. ராஜாராமன், துணைத் தலைவா் அ. முருகானந்தம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.