செய்திகள் :

தஞ்சாவூரில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூரில் மாநகரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக.5) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற்பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், அருளானந்த நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜ் நகா், பாத்திமா நகா், அன்பு நகா், திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரி குளம், கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா், ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா்,

சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகப் பகுதி, ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, மருதம், நெய்தல், நட்சத்திரா நகா், வி.பி. காா்டன், ஆா்.ஆா். நகா், சேரன் நகா், காவேரி நகா், நிா்மலா நகா், யாகப்பா நகா்,

அருளானந்தம்மாள் நகா், குழந்தை இயேசு கோயில், பிஷப் வளாகம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியி... மேலும் பார்க்க

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்துகணவன் - மனைவி உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (5... மேலும் பார்க்க