'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை
தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளாா், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, திருவையாறு உதவி செயற் பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவையாறு, மேலத்திருப்பந்துருத்தி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூா், வைத்தியநாதன்பேட்டை, பனையூா், கடுவெளி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூா், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூா், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.