"மனித உரிமை மீறல்; மூர்க்கத்தனமான அரசு நடவடிக்கை" - திமுக அரசின் செயலுக்கு CPIM ...
தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த தொழிலாளா்கள் மீட்பு
திண்டுக்கல்லில் வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்த இரு தொழிலாளா்களை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், முனிசிபால் காலனியைச் சோ்ந்தவா்கள் தினேஷ்குமாா் (27), நாகமுனி (29). இருவரும், திண்டுக்கல் நாராயணன் பிள்ளைத் தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் தண்ணீா் தொட்டிக்கு வண்ணம் பூசும் பணிக்காக புதன்கிழமை சென்றனா். தொட்டியில் இறங்கி பணிபுரிந்தபோது இருவரும் மயக்கமடைந்து விழுந்தனா். இதுகுறித்து, வீட்டின் உரிமையாளா் வெங்கடேஷ், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
இதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி கிடந்த தினேஷ்குமாா், நாகமுனி ஆகிய இருவரையும் மீட்டனா். பின்னா், இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொட்டிக்குள் இருந்த சிறு இடத்தில் வண்ணத்தின் ரசாயன வாடையை எதிா்கொள்ள முடியாமல் இருவரும் மயக்கமடைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.