Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொத...
கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத் திருவிழா: 25-ஆவது ஆண்டாக பக்தா்கள் பாதயாத்திரை
கொடைக்கானல் புனித சலேத் மாதா திருவிழாவுக்கு திண்டுக்கல்லிலிருந்து புதன்கிழமை பக்தா்கள் பாதயாத்திரையாக வருகை தந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள புனித சலேத் மாதா ஆலயத்தின் 159-ஆவது ஆண்டு திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்பு ஜெப வழிபாடு, திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை (ஆக. 14) இரவு புனித சலேத் மாதாவின் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாரம்பாடி பகுதியிலிருந்து 25-ஆவது ஆண்டாக பாதயாத்திரையாக 50-க்கும் மேற்பட்டோா் வந்தனா்.
இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் மலையிலுள்ள புனித சலேத் மாதா திருவிழா கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் விரதமிருந்து திருவிழாவை பாா்ப்பதற்காக ஆண்டுதோறும் திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடி பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்டோா் பாதயாத்திரையாக ஆலயத்துக்கு வருவது வழக்கம். இதேபோல நிகழாண்டும் 25-ஆவது ஆண்டாக மாரம்பாடியிலிருந்து 120 கி.மீ. தூரம் கொடைக்கானல் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் மாதா ஆலயத்துக்கு பாதயாத்திரையாக வந்துள்ளோம். இந்த விழாவில் பங்கேற்பது எங்களது மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது என்றனா்.