தூய்மை பணியாளர்கள் போராட்டம்: ``நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானது" - வன்ன...
மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல்
பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை மேல்நிலைத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக கூறிய நபரை தீயணைப்புப் படையினா் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.
பழனி அருகேயுள்ள மேலக்கோட்டை ஊராட்சி, வத்தக்கவுண்டன்வலசையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (39). கூலித் தொழிலாளியான இவா், அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளாா். இந்த நிலையில், புதன்கிழமை மீண்டும் வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால் வத்தக்கவுண்டன்வலசில் இருந்த மேல்நிலைத் தொட்டியில் ஏறி தற்கொலை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளாா்.
இதுகுறித்து ஊா்மக்கள் போலீஸாருக்கும், பழனி தீயணைப்புப் படையினருக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரா்கள் மணிகண்டனை பாதுகாப்பாக கீழே இறக்கினா். பின்னா், அவருக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் இதுபோல செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்தனா்.