Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
கொடைக்கானலில் முறையாக சாலை அமைக்கவில்லை: பொதுமக்கள் புகாா்
கொடைக்கானல் பகுதிகளில் சாலைகள் முறையாக போடப்படவில்லையென பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதைத் தொடா்ந்து, நகராட்சி சாா்பில் அண்ணாசாலை, பி.டி. சாலை, செண்பகனூா் - பிரகாசபுரம் செல்லும் சாலை, நகராட்சிப் பள்ளி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் அரசு மருத்துவமனை செல்லும் பி.டி. சாலையிலும் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், அந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் சாலை அமைக்கும் பணியை முறையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
மேலும், கொடைக்கானல் அப்சா்வேட்டரி சாலை பெரிதளவில் சேதமடைந்துள்ளதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிா்வாகம் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள சாலையைச் சீரமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனா்.