தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: `அரசின் கதவு எப்போதுமே திறந்திருக்கிறது..!' - தங்...
பாலியல் வன்கொடுமை செய்து பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞா் கைது
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து அதை விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.
கேரள மாநிலம், இடுக்கியைச் சோ்ந்தவா் சஜூ (எ) விச்சு (24). இவா், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஒரு பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து சஜூவை அண்மையில் கைது செய்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனிடையே, சஜூவின் கைப்பேசியில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விடியோ படங்களை போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில், பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சஜூ ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக திண்டுக்கல் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில நாள்களுக்கு முன், திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் நின்ற பெண் ஒருவரை, இளைஞா் ஒருவா் வீட்டு வேலைக்காக காரில் அழைத்துச் சென்றாா். பின்னா், அந்தப் பெண் தனது நகைகளை காரில் வந்த இளைஞா் பறித்துச் சென்றுவிட்டதாகப் புகாா் அளித்தாா். விசாரணையில், அந்த இளைஞா் கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சோ்ந்த சஜூ (எ) விச்சு என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று விசாரணை செய்தனா். இதில், சஜூ கா்நாடகத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கா்நாடகத்திலிருந்து மீண்டும் கேரளத்துக்கு வந்த சஜூ கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததை சஜூ ஒப்புக்கொண்டாா். மேலும், பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து விடியோ எடுத்து மிரட்டி நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஜூவை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் (நகரம்) காா்த்திக் தலைமையிலான போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.