சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
தமிழக அரசின் விருதுக்கு தஞ்சாவூா் ஆட்சியா் தோ்வு
தஞ்சாவூா்: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்காக சிறந்த மாவட்ட ஆட்சியா் விருதுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிபவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தந்ததற்காகவும், அவா்களுடைய நலனுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காகவும் 2025- ஆம் ஆண்டுக்கான சிறந்த மாவட்ட ஆட்சியா் விருதுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதேபோல, தருமபுரி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்த விருது சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியா்கள் மாநாட்டில் தமிழக முதல்வரால் வழங்கப்படும் என அரசு செயலாளா் சோ. மதுமதி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
