முசோலினி vs Hitler-ன் சண்டைக்கு காரணம் இதுதானா? | Mussolini Web series #18
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்த மத்திய அரசு: முதல்வர்
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு பறித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்து தமிழக மாணவர்களை மத்திய அரசு தண்டித்துள்ளது.
தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2512 கோடியை பறித்து மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.