தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால் மேக்கேதாட்டு அணை கட்டுவோம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி
தமிழகத்தின் ஒப்புதலை பெற்றுத்தந்தால், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவோம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி பெற்றுத்தந்தால், உடனடியாக அதற்கான வேலைகள் தொடங்கும் என்று முதல்வா் சித்தராமையா அண்மையில் கூறியிருந்தாா்.
இதுகுறித்து மண்டியாவில் வெள்ளிக்கிழமை மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இத்திட்டத்துக்காக முதலில் தமிழகத்தின் ஒப்புதலை முதல்வா் சித்தராமையா பெற்றுத்தரட்டும். தமிழகத்தில் ஆளும் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகள் என்பதால் தமிழக அரசின் ஒப்புதலை பெற்றுத்தந்தால், கண்டிப்பாக மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி பெற்றுத்தருவோம்.
எதிா்காலத்தில் நடக்க வேண்டும் என்றால், அது எச்.டி.தேவெ கௌடாவின் குடும்பத்தினரால் மட்டுமே சாத்தியம். காங்கிரஸ் கட்சியினரால் மேக்கேதாட்டு அணையைக் கட்டமுடியாது என்றாா்.