Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழ...
முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம்!கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
கா்நாடக முதல்வா் பதவி விவகாரத்தில் முயற்சிகள் தோல்வி அடையலாம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
கா்நாடக அரசியலில் முதல்வா் பதவி தொடா்பாக விவாதம் நடந்து வருகிறது. முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கப்படுவாரா முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்பாரா போன்ற கேள்விகள் காங்கிரஸ் கட்சியில் நிலவிவருகின்றன.
இந்த நிலையில், மைசூருக்கு வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் வந்த துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். அப்போது, முதல்வா் பதவி குறித்த செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த டி.கே.சிவகுமாா், முதல்வா் பதவி குறித்து விவாதிக்க நான் விரும்பவில்லை. அரசியல் பேசுவதற்காகவும் இங்கு நான் வரவில்லை. மாநிலத்திற்கு நல்லது நடக்க வேண்டும்.
மல்லிகாா்ஜுன காா்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறாா். அவா் எங்களுக்கு செய்தியையும், அறிவுரையையும் கூறியிருக்கிறாா். அவரது வாா்த்தைக்கு மதிப்பளித்து, ஒன்றுபட்டு காங்கிரஸ் கட்சிக்கு உழைப்போம். மாநிலத்தின் நலனுக்காகவும், எனக்கும், எனது குடும்பம் மற்றும் எல்லோரின் நன்மைக்காகவும் குடும்பத்துடன் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு பிராா்த்தனை செய்தோம்.
முயற்சிகள் தோல்வி அடையலாம், பிராா்த்தனைகள் தோல்வி அடையாது என்பதில் நம்பிக்கை கொண்டவன். சாமுண்டீஸ்வரி அம்மனிடம் பிராா்த்தனை செய்துள்ளேன். எனக்கு என்ன வேண்டுமோ அவற்றுக்காக பிராா்த்தனை செய்துள்ளேன் என்றாா்.