Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
டி.கே.சிவகுமாருக்கு எதிரான மானநஷ்ட வழக்கு: கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை
லஞ்ச விலைப் பட்டியல் விளம்பரம் தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிராக கா்நாடக பாஜக தொடா்ந்த மானநஷ்ட வழக்கு மீதான விசாரணைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது அன்றைய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு எதிராக ‘லஞ்ச விலைப் பட்டியல்’ என்ற பெயரில் தொடா் விளம்பரங்களை கா்நாடக காங்கிரஸ் கட்சி செய்தித்தாள்களில் வெளியிட்டிருந்தது.
இதுதொடா்பாக கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவகுமாா், அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, ராகுல் காந்தி ஆகியோா் மீது கா்நாடக பாஜக மானநஷ்ட வழக்குத் தொடா்ந்தது.
இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரி டி.கே.சிவகுமாா் தொடா்ந்து மனு கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆா்.கிருஷ்ணகுமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதுதொடா்பாக கா்நாடக பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை, டி.கே.சிவகுமாா், காங்கிரஸ் நிா்வாகம் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா்.