`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழ...
தமிழகத்தில் ஜூலை 5 வரை மழை வாய்ப்பு
தென் மேற்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் ஜூலை 5 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும், வேலூா் - 103.1, மதுரை நகரம் - 102.92, தஞ்சாவூா் - 102.2, சென்னை மீனம்பாக்கம் - 101.84, ஈரோடு - 101.48, திருத்தணி - 101.3, திருச்சி - 100.94, சென்னை நுங்கம்பாக்கம் - 100.58, பரங்கிப்பேட்டை - 100.4 டிகிரி என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜூன் 30, ஜூலை 1-ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: தென் மேற்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் திங்கள்கிழமை (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜூன் 30-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 90 மி.மீ. மழை பதிவானது. மேலும், வால்பாறை (கோவை), சோலையாா் (கோவை), பெரியாறு (தேனி) - தலா 50 மி.மீ.மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.