மும்பை: ராஜ் தாக்கரே பேச்சின் எதிரொலி; டான்ஸ் பார்களை அடித்து நொறுக்கிய கட்சியின...
தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்குவதற்கான 100 மின்-பேருந்துகளை வழங்குவதற்கான பூா்வாங்க ஒப்பந்தத்தை யுனிவா்சல் பஸ் சா்வீசஸ் (யுபிஎஸ்) நிறுவனத்தின் பிரிவான கிரீன் எனா்ஜி மொபிலிட்டியுடன் முன்னணி வா்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் நடைபெற்ற பயணிகள் வாகனக் கண்காட்சியில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சா் டிஆா்பி ராஜா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு முறை சாா்ஜ் செய்தால் 300 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய மேக்னா இவி பேருந்துகளை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.