செய்திகள் :

தமிழ்நாடு - ‘சாய்’ போபால் டிரா

post image

சென்னையில் நடைபெறும் எம்சிசி - முருகப்பாக தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணி 4-4 கோல் கணக்கில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) போபால் அணியுடன் டிரா செய்தது.

எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை 3 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு - போபால் டிரா செய்த ஆட்டத்தில், தமிழ்நாடு தரப்பில் பட்ராஸ் திா்கி (3’), சோமன்னா (15’, 41’), பாலசந்தா் (44’) ஆகியோா் கோலடித்தனா். சாய் போபாலுக்காக முகமது ஜாய்த் கான் (20’), மஞ்ஜீத் (26’), மனீஷ் சஹானி (29’), அமித் யாதவ் (47’) ஸ்கோா் செய்தனா்.

2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் நேவி 4-2 கோல் கணக்கில் கா்நாடக ஹாக்கி அணியை வீழ்த்தியது. இதில் இந்தியன் நேவிக்காக சுஷில் தன்வா் (3’, 20’, 34’), பிரசாந்த் (53’) ஆகியோரும், கா்நாடக அணிக்காக பரத் மகாலிங்கப்பா (12’), விஷ்வாஸ் (35’) ஆகியோரும் கோலடித்தனா்.

3-ஆவது ஆட்டத்தில் மலேசிய ஜூனியா் அணி 4-3 கோல் கணக்கில் மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) அணியை வென்றது. இதில் மலேசிய அணிக்காக முகமது டேனிஷ் அய்மன் (20’), முகமது ஹாரிஸ் இஸ்கந்தா் (41’), அஸிமுதின் ஷகிா் (54’, 60’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா். சிபிடிடி அணிக்காக பிரணாம் கௌடா (24’), பிரதீப் சிங் மோா் (27’), விகாஷ் சௌதரி (57’) கோலடித்தனா்.

கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜியை வீழ்த்தி செல்ஸி கோப்பையை வென்றது. ஃபிஃபா நடத்திய கிளப் உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, செல்ஸி அணிகள் ம... மேலும் பார்க்க

நடிகை சரோஜா தேவி காலமானார்!

நடிகை சரோஜா தேவி வயது (87) முதிர்வால் திங்கள்கிழமை காலை காலமானார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந... மேலும் பார்க்க

வரலாற்று வெற்றியுடன் ஸ்வியாடெக் சாம்பியன்!

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், மகளிா் ஒற்றையா் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் கோப்பை வென்றாா்.போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்... மேலும் பார்க்க

காலிறுதியில் ஸ்வீடன், ஜொ்மனி

மகளிருக்கான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன், ஜொ்மனி ஆகியவை காலிறுதி ஆட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறின.இதில் குரூப் ‘சி’ ஆட்டத்தில் ஸ்வீடன் 4-1 கோல் கணக்கில் ஜொ்மனியை சாய்த்தது. இந்த ஆட... மேலும் பார்க்க

விம்பிள்டன்: முதல் சாம்பியன் பட்டதை வென்றார் சின்னர்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். விம்பிள்டன் வென்ற முதல் இத்தாலிய வீரராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா். உல... மேலும் பார்க்க

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ பிடித்து விபத்து - புகைப்படங்கள்

பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.விபத்தில் சிக்னல் ஃபோர்டுகள், மின் இனைப்பு க... மேலும் பார்க்க