குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்
தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்: டி.ஜெயக்குமார்
தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 11 ஆண்டுகள் முதல்வராக இருந்து தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர். பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்ற பாடல்கள் என்றால் அது எம்ஜிஆர் பாடல்கள் தான். அதிமுகவை பொருத்தவரை இது ஏழையின் கட்சி, ஏழைகளின் கட்சி. எம்ஜிஆரின் புகழ் என்பது எல்லா தரப்பட்ட மக்களும் முழுமையாக போற்றக்கூடிய வகையில் உள்ளது.
எம்ஜிஆரை புகழ்கிறார்கள் கருணாநிதியை யாராவது புகழ்கிறார்களா? கருணாநிதியை ஒருவரும் புகழப்போவது கிடையாது. மு.க.ஸ்டாலின் தனது அப்பாவினுடைய சமாதிக்கு எவ்வளவு கோடி செலவு பண்ணி ஆடம்பரம் பண்ணினாலும் வந்து பார்த்தவர்களை கணக்கிட்டுப்பாருங்கள். பொங்கலன்று கூட வைத்துக் கொள்ளுங்கள் எம்ஜிஆர் - ஜெயலலிதா இரண்டு நினைவிடத்திற்கு வந்தவர்களுடைய கூட்டம் எவ்வளவு? கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த கூட்டம் எவ்வளவு? 10% கூட இருக்காது.
பரந்தூர் செல்லும் விஜய்- ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த்
எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் புகழை யாராலும் அசைக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாத அழியாத புகழுக்கு சொந்தக்காரர்கள். பன்னாட்டு மையம் அமைக்க ரூ. 526 கோடி பணம் இருக்கிறது. பொங்கல் பரிசாக எடப்பாடியார் ரூ. 2000 கொடுத்தார். அன்று 5000 ரூபாய் கேட்டீர்கள், 5000 வேண்டாம் 2500 வது கொடுக்கலாம். அல்லது ஆயிரமாவது கொடுக்கலாம். ஆனால் மக்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை.
வாய்மையே வெல்லும் என்ற நிலை போய், பொய்மையே வெல்லும் என்ற நிலையில் திமுக ஆட்சி உள்ளது. எங்கள் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் உலக அரசியலும் கிடையாது, தமிழ்நாடு அரசியலும் கிடையாது என்றார்.