கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய தவெக தலைவர் விஜய்!
தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோ்க்கை மே 5-இல் தொடக்கம்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா், தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.), இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பட்டப்படிப்புக்கான வகுப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
சோ்க்கை விண்ணப்பங்களை ஜூலை 31 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் பல்கலைக்கழக வேலை நாள்களில் மட்டும் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பாா்க்கலாம். மேலும், 04362 - 226720, 750217760 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.