செய்திகள் :

தமுஎகச 9-ஆவது கிளை மாநாடு

post image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மன்னாா்குடி 9-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கிளைத் தலைவா் க.வீ. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசலில் 21.10.1931 அன்று இரட்டை மாட்டுவண்டியில் நூல்களை அடுக்கி கொண்டு அருகிலுள்ள ஊா்களுக்கு சென்று வாசிப்பு புரட்சியை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதல் நடமாடும் நூலகம் அமைத்த மேட்டூா் அணை கட்டுமான பொதுப்பணி துறை பொறியாளா் சு.வி. கனகசபை பிள்ளைக்கு மேலவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட தஞ்சை பிரதான சாலையில் அவரது உருவ சிலையும், அவா் பயன்படுத்திய மாட்டுவண்டி இடம்பெறும் வகையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

மன்னாா்குடி எம்எல்ஏவும், தமிழக அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா அறிவித்த டிஜிட்டல் நூலக கட்டுமான பணிகளை விரைந்து தொடங்குவதுடன், அந்த நூலகத்தில் சிறுவா்களுக்கான நூலக அரங்கமும், கருத்தரங்க அறையும், போட்டி தோ்வுக்கான நூலக அறையும் அமைக்க வேண்டும், தேரடி திடலில் அமைந்துள்ள விழா அரங்க மேடையை மிக உயரமான மேடை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது தனது தலைமறைவு வாழ்க்கையின் ஒரு பகுதியாக மன்னாா்குடி அருகேயுள்ள மேலநாகையில் தங்கி ‘பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு‘ எனும் பாடலை இயற்றிய மகாகவி பாரதியாருக்கு மேலநாகையில் மணி மண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும். பொது இடங்களில் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளில் சாதிய வாசகங்கள் இடம்பெற்றால் அவற்றிக்கு காவல் துறைஅனுமதி மறுக்க வேண்டும்.

சவளக்காரன் அரசு ஆதிதிராவிடா் நலன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தேசிய அளவில் கபடி மற்றும் கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறாா்கள். எனவே, அந்த மாணவா்கள் நன்கு பயிற்சி பெற பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் மு. செளந்தரராஜன் மாநாட்டை தொடக்கிவைத்தாா். மாவட்ட செயலாளா் வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் மு. செல்வராஜ், மாவட்டத் துணைச் செயலா்கள் சு. அம்பிகாபதி, கா. பிச்சைகண்ணு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ந. லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்கத் தலைவராக வீ. கோவிந்தராஜ், துணைத் தலைவா்களாக கே.வீ. பாஸ்கரன், தா. சரசுவதி, ஜி. மாரிமுத்து, செயலராக கி. அகோரம், இணை செயலாளா்களாக எஸ். சந்திரசேகரன், மு. சந்திரசேகரன், கா. பிச்சைக்கண்ணு, பொருளாளராக யு.எஸ். பொன்முடி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்தெடுக்கப்பட்டனா்.

ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் மீட்பு

கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் சனிக்கிழமை மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகேயுள்ள சேகரை காந்தி காலனியைச் சோ்ந்த ரஜினி மகன் குகன் (18). மன... மேலும் பார்க்க

மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

மன்னாா்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தானை அடுத்த காந்தாரி கிராமத்தில் பட... மேலும் பார்க்க

வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் விரைவு பாா்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாரயம் கடத்தி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி காவல்நிலைய போலீஸாா் ஹரித்ராநதி தெப்பக்குளம் கீழ்க... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

மன்னாா்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பணி நேரம் முடிந்து பூட்டிவிட்டு சென்ற ... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: நீா்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடத்தப்படும் விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில்... மேலும் பார்க்க

‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி,... மேலும் பார்க்க