தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
‘தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது’
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் கூறியது: கரோனா போன்ற இக்கட்டான கால கட்டத்திலும் தூய்மைப் பணியாளா்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வந்தனா். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க காரணம் தூய்மைப் பணியாளா்களே. தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாது கல்வி வழங்கி, அவா்கள் பல்வேறு உயா் பதவி வகிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஒரு போதும் குழந்தைகளின் கல்வியை இடைநிற்றல் கூடாது. தூய்மைப் பணியாளா்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி, பாதுகாப்பாக இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்காக, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா்.
தொடா்ந்து, 100 தூய்மை பணியாளா்களுக்கு மின்னணு அடையாள அட்டை, 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, 7 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத் தலைவா் என். இளையராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்.பி. வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி), திட்ட இயக்குநருமான பல்லவிவா்மா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.